மேலும் செய்திகள்
தென் ஆப்ரிக்க அணி அசத்தல்: வியான் முல்டர் சதம்
30-Oct-2024
டர்பன்: டர்பன் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் டர்பனில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.தென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ரம் (9), டோனி டி ஜோர்ஜி (4) ஏமாற்றினர். லகிரு குமாரா 'வேகத்தில்' ஸ்டப்ஸ் (16), டேவிட் பெடிங்காம் (4) வெளியேறினர். தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 80 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. கனமழை நீடித்ததால் முதல் நாள் ஆட்டத்தை பாதியில் ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர்.கேப்டன் பவுமா (28), கைல் வெர்ரின்னே (9) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் லகிரு குமாரா 2 விக்கெட் சாய்த்தார்.
30-Oct-2024