| ADDED : ஜூலை 21, 2024 11:39 PM
நாட்டிங்காம்: இரண்டாவது டெஸ்டில் 241 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2வது டெஸ்ட் நாட்டிங்காமில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 416, வெஸ்ட் இண்டீஸ் 457 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 248/3 ரன் எடுத்திருந்தது.நேற்று 4ம் நாள் ஆட்டம் நடந்தது. ஹாரி புரூக் (109), டெஸ்ட் அரங்கில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். ஜோ ரூட் (122), டெஸ்ட் அரங்கில் தனது 32வது சதம் அடித்தார். இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 425 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. அட்கின்சன் (21) அவுட்டாகாமல் இருந்தார்.பின், 385 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 143 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. கேப்டன் பிராத்வைட் (47), ஹோல்டர் (37) ஆறுதல் தந்தனர். இங்கிலாந்து சார்பில் சோயப் பஷிர் 5 விக்கெட் சாய்த்தார்.