உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / செஸ்: குகேஷ் வெற்றி

செஸ்: குகேஷ் வெற்றி

புக்காரெஸ்ட்: 'சூப்பர்பெட்' செஸ் தொடர் முதல் சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றார்.ருமேனியாவில் சர்வதேச 'சூப்பர்பெட்' செஸ் தொடர் நேற்று துவங்கியது. உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க உள்ள இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பேபியானோ காருணா உட்பட முன்னணி வீரர்கள் 10 பேர் பங்கேற்கின்றனர். நேற்று நடந்த முதல் சுற்றில் குகேஷ், ருமேனியாவின் பாக்டனை சந்தித்தார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ், போட்டியின் 50 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் மோதிய மற்றொரு போட்டி, 64 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. முதல் சுற்று முடிவில் காருணா, குகேஷ் தலா 1 புள்ளியுடன் முதலிடத்தில் இருந்தனர். அமெரிக்காவின் வெஸ்லே, பிரான்சின் வாசியர், பிரக்ஞானந்தா உள்ளிட்டோர் தலா 0.5 புள்ளியுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ