உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்திய பெண்கள் அசத்தல் வெற்றி: பாகிஸ்தானை வீழ்த்தியது

இந்திய பெண்கள் அசத்தல் வெற்றி: பாகிஸ்தானை வீழ்த்தியது

தம்புல: ஆசிய கோப்பை தொடரை இந்திய பெண்கள் அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.இலங்கையின் தம்புலாவில் பெண்களுக்கான ஆசிய கோப்பை ('டி-20') 9வது சீசன் நேற்று துவங்கியது. 'ஏ' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் கேப்டன் நிடா தர், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.பாகிஸ்தான் அணிக்கு பூஜா தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' குல் பெரோசா (5), முனீபா அலி (11) வெளியேறினர். ஸ்ரேயங்கா பாட்டீல் பந்தில் அலியா ரியாஸ் (6) அவுட்டானார். கேப்டன் நிடா தர் (8), தீப்தி சர்மா 'சுழலில்' சிக்கினார். சிட்ரா அமீன் (25), ரேணுகா சிங் பந்தில் 'பெவிலியன்' திரும்பினார். துபா ஹசன் (22) ஆறுதல் தந்தார்.ராதா யாதவ் வீசிய 19வது ஓவரில் பாத்திமா சனா 2 சிக்சர் விளாச, பாகிஸ்தான் அணி 100 ரன்னை கடந்தது. பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 108 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பாத்திமா சனா (22) அவுட்டாகாமல் இருந்தார்.

சூப்பர் துவக்கம்

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. துபா ஹசன் ஓவரில் மந்தனா, 5 பவுண்டரி உட்பட 21 ரன் விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 85 ரன் சேர்த்த போது சையதா அரூப் ஷா பந்தில் மந்தனா (45) அவுட்டானார். ஹேமலதா தயாளன், நஷ்ரா சாந்து ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி விரட்டினார். ஷபாலி, 40 ரன் எடுத்தார். நஷ்ரா பந்தில் ஹேமலதா (14) அவுட்டானார்.இந்திய அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 109 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (5), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூன்றாவது இடம்

சர்வதேச 'டி-20' அரங்கில் அதிக ரன் குவித்த வீராங்கனைகள் வரிசையில் வெஸ்ட் இண்டீசின் ஸ்டெபானி டெய்லர் (3338 ரன்), இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுரை (3349) முந்தி 3வது இடம் பிடித்தார் இந்தியாவின் மந்தனா. 137 போட்டியில் 3365 ரன் எடுத்துள்ளார். முதலிரண்டு இடங்களில் நியூசிலாந்தின் சுசீ பேட்ஸ் (4348 ரன்), ஆஸ்திரேலியாவின் மேக் லானிங் (3405) உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை