உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சூர்யகுமார் புதிய கேப்டன் * இலங்கை டி-20 தொடரில்...

சூர்யகுமார் புதிய கேப்டன் * இலங்கை டி-20 தொடரில்...

புதுடில்லி: இந்திய 'டி-20' அணியின் கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட உள்ளார்.இலங்கை செல்லவுள்ள இந்திய அணி, மூன்று 'டி-20', மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 'டி-20' போட்டி வரும் ஜூலை 27, 28, 30ல் பல்லேகெலே, ஒருநாள் போட்டி ஆக., 2, 4, 7 ல் கொழும்புவில் நடக்க உள்ளன.இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. உலக கோப்பை வென்று தந்த கேப்டன் ரோகித் சர்மா, 'டி-20'ல் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் துணைக் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருந்தது. புதிய திருப்பம்ஆனால், புதிய பயிற்சியாளர் காம்பிர், தேர்வுக்குழு தலைவர் அகார்கர் இணைந்து, சூர்யகுமாரை கேப்டனாக தேர்வு செய்ய உள்ளனர். இவர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க தொடரில் 8 போட்டிக்கு கேப்டனாக இருந்தார். 2026 'டி-20' உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், நீண்ட கால திட்டத்துடன் இம்முடிவு எடுக்கப்பட உள்ளது. ராகுல் வாய்ப்புஒருநாள் தொடருக்கான அணிக்கு லோகேஷ் ராகுல் அல்லது சுப்மன் கில் கேப்டனாக தேர்வு செய்யப்படலாம். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு தரப்பில் வெளியான செய்தி:இலங்கை தொடருக்கு பாண்ட்யா முழு உடற்தகுதியுடன் உள்ளார். ரோகித்துக்குப் பதில் கேப்டனாக இருந்தார். ஆனால் இலங்கை தொடர் மட்டுமன்றி, 2026 'டி-20' உலக கோப்பை தொடர் வரை சூர்யகுமார் கேப்டனாக நியமிக்கப்படலாம். அடுத்து வங்கதேசம், நியூசிலாந்து டெஸ்ட் தொடர் வரவுள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் இலங்கை தொடரில் இடம் பெறாத வீரர்கள் துலீப் டிராபியில் சில போட்டிகளில் பங்கேற்பர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ