மேலும் செய்திகள்
இரானி கோப்பை: விதர்பா சாம்பியன்
22 hour(s) ago
விதர்பா அணி ஆதிக்கம் * இரானி கோப்பையில்...
04-Oct-2025
புதிய கேப்டன் சுப்மன் கில்
03-Oct-2025 | 1
பல்லேகெலே: இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்தை பெற ரிஷாப் பன்ட், சஞ்சு சாம்சன் இடையே பலத்த போட்டி காணப்படுகிறது.இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 'டி-20' போட்டியில் பங்கேற்கிறது. முதல் போட்டி நாளை பல்லேகெலே மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணி விக்கெட் கீப்பராக ரிஷாப் பன்ட், சஞ்சு சாம்சன் என இருவரில், யார் களமிறங்குவர் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 2017ல் 'டி-20'ல் அறிமுகம் ஆன ரிஷாப், 74 போட்டியில் பங்கேற்று விட்டார். விபத்துக்குப் பின் மீண்டு வந்துள்ள இவர், சமீபத்தில் 'டி-20' உலக கோப்பை தொடரில் அதிக ரன் (171) எடுத்த இந்திய வீரர்களில் 3வது இடம் பிடித்தார். மறுபக்கம் 2015 அறிமுகம் ஆன சாம்சனுக்கு தொடர்ச்சியான வாய்ப்பு கிடைக்கவில்லை. 'டி-20' உலக அணியில் இருந்த போதும் களமிறங்கவில்லை. சமீபத்திய ஜிம்பாப்வே தொடரில் வாய்ப்பு பெற்ற சாம்சன், 70 ரன் (2 போட்டி) எடுத்தார். இதுவரை 28 போட்டியில் தான் பங்கேற்றுள்ளார். புதிய பயிற்சியாளர் காம்பிர், ரிஷாப் முதல் தர போட்டிகளில் பங்கேற்ற போது கேப்டனாக இருந்தார். அதேநேரம் வர்ணனை பணியில் இருந்த போது, சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என காம்பிர் குரல் கொடுத்தார். இதனால் நாளை துவங்கும் முதல் போட்டியில் யார், விக்கெட் கீப்பராக களமிறங்குவர் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
22 hour(s) ago
04-Oct-2025
03-Oct-2025 | 1