மேலும் செய்திகள்
இரானி கோப்பை: விதர்பா சாம்பியன்
19 hour(s) ago
விதர்பா அணி ஆதிக்கம் * இரானி கோப்பையில்...
04-Oct-2025
புதிய கேப்டன் சுப்மன் கில்
03-Oct-2025 | 1
ஹராரே: ஜிம்பாப்வே தொடரில் மீண்டு வந்துள்ள வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா இடத்தை பிடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்திய அணி சுழற்பந்துவீச்சு ஆல் ரவுண்டர், தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் 24. கடந்த 2017ல் இலங்கை ஒருநாள் (மொகாலி) போட்டியில் அறிமுகம் ஆனார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பென், அறிமுக டெஸ்டில் அசத்தினார். அடுத்தடுத்து ஏற்பட்ட காயம், மோசமான பார்ம் காரணமாக, 2017 முதல் நடந்த 5 பல்வேறு உலக கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை. கடந்த ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணிக்காக முதல் இரு போட்டியில் (2 போட்டி, 1 விக்.,) சோபிக்கவில்லை. இதனால் நிதிஷ் குமார் இவரது இடத்தை தட்டிச் சென்றார். ஷாபாஸ் அகமது, வியாஸ்காந்து என மற்ற வீரர்களுக்கு முன்னுரிமை கிடைத்தது. வேறு வழியில்லாத நிலையில் தொடர் முழுவதும் 'பெஞ்ச்சில்' அமர்ந்து இருக்க நேரிட்டது. பவுலிங் நம்பிக்கைஐ.பி.எல்., தொடருக்குப் பின் சென்னை திரும்பிய வாஷிங்டன் சுந்தர், முதல் தர லீக் போட்டிகளில் பங்கேற்றார். 3 போட்டியில் 112 ஓவர்கள் பந்து வீசி, 7 விக்கெட் சாய்த்தார். இருப்பினும் 'டி-20' உலக கோப்பை அணி வாய்ப்பு, அக்சர் படேலுக்கு சென்றது. பின் ஜிம்பாப்வே தொடரில் சேர்க்கப்பட்டார். தன்மீது தேர்வாளர்கள் வைத்த நம்பிக்கையை தற்போது காப்பாற்றியுள்ளார் வாஷிங்டன் சுந்தர். முதல் 3 போட்டியில் 6 விக்கெட் சாய்த்தார். 3வது போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் (3 விக்.,) ஆனார். துல்லிய பவுலர்'சீனியர்' அஷ்வினுக்கு அடுத்து, துல்லியமாக 'ஆப் ஸ்பின்' வீசும் பவுலர், பேட்டிங்கில் கைகொடுக்கும் திறமை கொண்ட ஒரே இந்திய வீரராக, வாஷிங்டன் சுந்தர் திகழ்கிறார். 'டி-20' ஸ்பெஷலிஸ்ட் பவுலராக அறியப்படும் இவர், ஹராரேயில் டெஸ்ட் போட்டியில் வீசுவதைப் போல, 'ஆப் பிரேக்' பந்துவீசி ஆச்சரியப்படுத்தினார். பந்துகளில் 2.5 டிகிரி வரை திருப்பத்தை ஏற்படுத்துகிறார். இது ரவி பிஷ்னோய் (2.3), அபிஷேக்கை (0.8) விட அதிகம். தற்போது 'டி-20'ல் இருந்து ஜடேஜா ஓய்வு பெற்றுள்ளார். தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தால், 2026 'டி-20' உலக அணியில் வாஷிங்டன் சுந்தர் இடம் பிடிக்கலாம்.
19 hour(s) ago
04-Oct-2025
03-Oct-2025 | 1