மேலும் செய்திகள்
இரானி கோப்பை: விதர்பா சாம்பியன்
21 hour(s) ago
விதர்பா அணி ஆதிக்கம் * இரானி கோப்பையில்...
04-Oct-2025
புதிய கேப்டன் சுப்மன் கில்
03-Oct-2025 | 1
கோல்கட்டா: ஐ.பி.எல்., 'பிளே ஆப்' சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது கோல்கட்டா. நேற்று மும்பையை 18 ரன்னில் வென்றது.கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் மும்பை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழை காரணமாக போட்டி 1 மணி நேரம், 45 நிமிடம் தாமதமாக துவங்கியது. தலா 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 'டாஸ்' வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது.வெங்கடேஷ் நம்பிக்கைகோல்கட்டா அணிக்கு பில் சால்ட்(6), சுனில் நரைன்(0)ஜோடிமோசமான துவக்கம் கொடுக்க, 10 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அடுத்து வெங்கடேஷ், ஸ்ரேயாஸ் இணைந்து அணியை மீட்கும் முயற்சித்தனர். போட்டியின் 4வது ஓவரை வீசினார் பும்ரா. இதில் 4, 6, 4 என வெங்கடேஷ் விளாச, 15 ரன் கிடைத்தன. ஸ்ரேயாஸ் 7 ரன்னில் அவுட்டானார். வெங்கடேஷ் (42), நிதிஷ் ராணா (33) கைகொடுக்க, கோல்கட்டா அணி 16 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 157 ரன் எடுத்தது. இஷான் ஆறுதல்மும்பை அணிக்கு இஷான் கிஷான் (40), ரோகித் சர்மா (19) கூட்டணி துவக்கம் கொடுத்தது. சூர்யகுமார் 11 ரன் எடுக்க, ஹர்திக் பாண்ட்யா (2), டிம் டேவிட் (0), வதேரா (3) ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகினர். கடைசி நேரத்தில் திலக் வர்மா, நமன் திர் போராடினர். ஹர்ஷித் வீசிய கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 22 ரன் தேவைப்பட்டன. முதல், 3வது பந்தில் நமன் திர் (17), திலக் வர்மா (32) அவுட்டாக, 3 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. மும்பை அணி 16 ஓவரில் 139/8 ரன் எடுத்து தோல்வியடைந்தது. 12 போட்டியில் 9 வெற்றியுடன் 18 புள்ளி எடுத்த கோல்கட்டா, முதல் அணியாக 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறியதுவெல்லுமா சென்னைசென்னை அணி இதுவரை 12 போட்டியில் 12 புள்ளி பெற்றுள்ளது. அடுத்த இரு போட்டியில் வென்றால் மட்டுமே 'பிளே ஆப்' செல்ல முடியும். இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் ராஜஸ்தானை (16) சந்திக்கிறது.
21 hour(s) ago
04-Oct-2025
03-Oct-2025 | 1