| ADDED : மே 02, 2024 12:09 AM
சென்னை: சென்னை அணியின் பேட்டர்கள் கைவிட, 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் தோற்றது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பஞ்சாப் அணி பீல்டிங் தேர்வு செய்தது.ருதுராஜ் அரைசதம்சென்னை அணிக்கு கேப்டன் ருதுராஜ், ரகானே ஜோடி துவக்கம் கொடுத்தது. மறுபக்கம் 200வது 'டி-20' போட்டியில் களமிறங்கிய ரபாடா வீசிய முதல் ஓவரில் 4 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. அர்ஷ்தீப் வீசிய அடுத்த ஓவரில் ருதுராஜ், 2 பவுண்டரி அடித்தார். வழக்கம் போல நிதானமாக விளையாடிய ரகானே, அர்ஷ்தீப் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி ஆறுதல் தந்தார்.சாம் கர்ரான் வீசிய 6வது ஓவரில் ரகானே மூன்று பவுண்டரி அடிக்க, சென்னை அணி 55/0 ரன் (6 ஓவர்) எடுத்தது. அடுத்த இரண்டு ஓவரில் சென்னை அணி 5, 4 என எடுக்க அணியின் ரன் வேகம் அப்படியே மந்தமானது.போட்டியின் 9வது ஓவரை வீசிய ஹர்பிரீத் பிரார், ரகானே (29), துபேவை (0) அவுட்டாக்க, ரசிகர்கள் 'ஷாக்' ஆகினர். ஜடேஜா (2) ஏமாற்றினார். சென்னை அணி 14.5வது ஓவரில் 100 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் ரபாடா 'வேகத்தில்' ரிஸ்வி (21) அவுட்டானார். 16.2 வது ஓவரில், இப்போட்டியின் முதல் சிக்சர் அடித்த ருதுராஜ், 44 வது பந்தில் அரைசதம் கடந்தார். இவர் 48 பந்தில் 62 ரன் எடுத்து, அர்ஷ்தீப் பந்தில் போல்டானார். மொயீன் அலியும் (15) நிலைக்கவில்லை. அர்ஷ்தீப் வீசிய கடைசி ஓவரில் தோனி (14), தலா ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 162 ரன் மட்டும் எடுத்தது.பேர்ஸ்டோவ் அபாரம்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் ரன் வேட்டையில் ஈடுபட்டனர். சென்னை அணியின் சேப்பாக்கம் கோட்டையை தகர்த்தனர். பிரப்சிம்ரன் (13), பேர்ஸ்டோவ் (46) ஜோடி துவக்கம் தர, ரூசோவ் 23 பந்தில் 43 ரன் எடுத்தார். பின் சஷாங்க் சிங், கர்ரான் இணைந்து அணியை எளிதாக வெற்றி பெறச் செய்தனர். பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 163/3 எடுத்து வெற்றி பெற்றது. கர்ரான் (26), சஷாங்க் (25) அவுட்டாகாமல் இருந்தனர்.