உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சாம்சனுக்கு என்ன ஆச்சு

சாம்சனுக்கு என்ன ஆச்சு

புதுடில்லி: காயம் காரணமாக ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் அடுத்த போட்டியில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.பிரிமியர் தொடரில் ராஜஸ்தான் அணி, இதுவரை பங்கேற்ற 7 போட்டியில் 2ல் மட்டும் வென்று (5ல் தோல்வி) பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. அணியில் கேப்டனாக உள்ளார் சஞ்சு சாம்சன். கடைசியாக டில்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி, சூப்பர் ஓவரில் தோல்வியடைந்தது.இப்போட்டியில் துவக்க வீரராக களமிளங்கிய சாம்சன், 19 பந்தில் 31 ரன் எடுத்திருந்தார். அப்போது காயம் காரணமாக 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் வெளியேறினார். ஏற்கனவே கைவிரல் எலும்பு முறிவு காரணமாக, முதல் 3 போட்டியில் பேட்டராக பங்கேற்றார். இதுகுறித்து ராஜஸ்தான் அணி பயிற்சியாளர் டிராவிட் கூறுகையில்,'' டில்லி அணிக்கு எதிரான போட்டியில் சாம்சன் காயமடைந்தார். இவரது வயிற்று பகுதியில் வலி உள்ளது. இதற்காக இரண்டு முறை 'ஸ்கேன்' செய்யப்பட்டது. சாம்சனின் காயத்தின் தன்மை குறித்து அறிந்து கொள்ள இந்த சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். இதன் பின் போட்டிகளில் பங்கேற்பது குறித்து முடிவெடுப்போம். என்ன நடக்கும் என பொறுத்திருந்து காணலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை