உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ராகுல், ஜடேஜா விலகல்: இந்திய அணிக்கு பின்னடைவு

ராகுல், ஜடேஜா விலகல்: இந்திய அணிக்கு பின்னடைவு

ஐதராபாத்: காயம் காரணமாக ராகுல், ஜடேஜா இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகினர்.இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் 28 ரன்னில் தோற்ற இந்தியா, 0-1 என தொடரில் பின் தங்கியுள்ளது. இதனிடையே முதல் டெஸ்டில் 'ஆல் ரவுண்டர்' ஜடேஜா, தொடையின் பின் பகுதியில் காயம் அடைந்தார். ராகுல் வலது தொடைப்பகுதி வலியால் அவதிப்படுகிறார்.இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வெளியிட்ட செய்தி:ஜடேஜா, ராகுல் என இருவரும் விசாகப்பட்டனத்தில் பிப். 2ல் துவங்கவுள்ள இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகினர். இவர்களது காயத்தின் தன்மை குறித்து பி.சி.சி.ஐ., மருத்துவ குழு தொடர்ந்து கண்காணிக்கும்.இவர்களுக்குப் பதில் மும்பை வீரர் சர்பராஸ் கான், சுழற்பந்து வீச்சாளர் சவுரப் குமார், 'ஆல் ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டனர். அவேஸ் கான் மத்திய பிரதேச அணியுடன் இருப்பார். தேவைப்பட்டால் இந்திய அணிக்கு அழைக்கப்படுவார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பின்னடைவா

ஏற்கனவே 'சீனியர்' கோலி, தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் இரு டெஸ்டில் விலகினார். முதல் டெஸ்டில் தோற்ற நிலையில் இந்தியா இரண்டாவது டெஸ்ட்டை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால், அனுபவம் வாய்ந்த ஜடேஜா, ராகுல் என இருவரும் விலகியது இந்திய அணிக்கு கூடுதல் பின்னடைவாக அமையலாம்.

அணி விபரம்

ரோகித் (கேப்டன்), சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ், பாரத், துருவ் ஜோரல், அஷ்வின், அக்சர் படேல், குல்தீப், முகமது சிராஜ், முகேஷ் குமார், அவேஷ் கான், பும்ரா, ரஜத் படிதர், சர்பராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், சவுரப் குமார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை