மேலும் செய்திகள்
இரானி கோப்பை: விதர்பா சாம்பியன்
14 hour(s) ago
விதர்பா அணி ஆதிக்கம் * இரானி கோப்பையில்...
04-Oct-2025
புதிய கேப்டன் சுப்மன் கில்
03-Oct-2025 | 1
துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்டர் தரவரிசையில் ஜெய்ஸ்வால் 6வது இடத்துக்கு முன்னேறினார்.சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது.பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் யாஷஸ்வி ஜெஸ்வால், 743 புள்ளிகளுடன் 10வது இடத்தில் இருந்து 'நம்பர்-6' இடத்துக்கு முன்னேறினார். ஜிம்பாப்வேக்கு எதிரான 3 'டி-20' போட்டியில் 141 ரன் விளாசினார். இத்தொடரில் அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் சுப்மன் கில் (533 புள்ளி), 36 இடம் முன்னேறி 37வது இடத்தை கைப்பற்றினார். இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் (684), 7வது இடத்தில் இருந்து 8வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிரண்டு இடங்களில் ஆஸ்திரேலியாவின் ஹெட் (844), இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் (797) நீடிக்கின்றனர்.பவுலர்களுக்கான தரவரிசையில் 'டாப்-10' பட்டியலில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை. ஜிம்பாப்வே தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட இந்தியாவின் அக்சர் படேல் (625) 9வது இடத்தில் இருந்து 13வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தொடர் நாயகன் வாஷிங்டன் சுந்தர் (46வது இடம்), வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் (73வது இடம்) முன்னேற்றம் கண்டனர். முதலிடத்தில் இங்கிலாந்தின் அடில் ரஷித் உள்ளார்.'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (6வது இடம்), அக்சர் படேல் (13வது இடம்) பின்னடைவை சந்தித்தனர். இலங்கையில் ஹசரங்கா முதலிடத்தில் தொடர்கிறார்.
14 hour(s) ago
04-Oct-2025
03-Oct-2025 | 1