மேலும் செய்திகள்
இரானி கோப்பை: விதர்பா சாம்பியன்
22 hour(s) ago
விதர்பா அணி ஆதிக்கம் * இரானி கோப்பையில்...
04-Oct-2025
புதிய கேப்டன் சுப்மன் கில்
03-Oct-2025 | 1
கோவை: திருப்பூர் அணியின் புதிய கேப்டனாக சாய் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.டி.என்.பி.எல்., எட்டாவது சீசன் நடக்கிறது. முதல் கட்ட போட்டிகள் சேலத்தில் நடந்தன. இரண்டாம் கட்ட போட்டிகள் கோவையில் இன்று துவங்குகிறது. முதல் கட்ட லீக் சுற்றின் முடிவில், திருப்பூர் அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.திருப்பூர் அணியின் கேப்டனாக இருந்த விஜய் சங்கர், கோவை அணிக்கு எதிராக 16, சேப்பாக்கம் அணிக்கு எதிராக 4 ரன் மட்டுமே எடுத்தார். இந்நிலையில், திருப்பூர் அணியின் புதிய கேப்டனாக சாய் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.திருப்பூர் அணி உரிமையாளர் ரிஷிகேஷ் ஸ்ரீராம் மூர்த்தி கூறுகையில், ''தோள்பட்டை காயத்தால் அவதிப்படும் விஜய் சங்கர் அடுத்த போட்டியில் விளையாட இயலாது. மீதமுள்ள போட்டிகளில் கேப்டனாக சாய் கிஷோர் செயல்படுவார்,'' என்றார்.சாய் கிஷோர் கூறுகையில்,''தற்போது கடைசி இடத்தில் இருப்பது பெரிய சரிவு கிடையாது. அடுத்த சில போட்டிகளில் வெற்றி பெற்றால் இரண்டாம், மூன்றாம் இடத்துக்கு வந்துவிடுவோம். அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால், கேப்டனாக எனது பணியில் சிரமம் இருக்காது,'' என்றார்.
22 hour(s) ago
04-Oct-2025
03-Oct-2025 | 1