மேலும் செய்திகள்
கூச் பெஹார் டிராபி: தமிழகம் அபாரம்
22-Nov-2025 | 1
ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி., வெற்றி: டிராவிஸ் ஹெட் சதம்
22-Nov-2025
புதுடில்லி: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு கேப்டனாக ராகுல் நியமிக்கப்பட்டார். கழுத்து வலி காரணமாக சுப்மன் கில் விலகினார்.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் நவ. 30ல் ராஞ்சியில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் ராய்பூர் (டிச. 3), விசாகப்பட்டனத்தில் (டிச. 6) நடக்கவுள்ளன. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.கில் விலகல்: சமீபத்தில் முடிந்த கோல்கட்டா டெஸ்டில் கழுத்து வலியால் பாதிக்கப்பட்ட 'ரெகுலர்' கேப்டன் சுப்மன் கில் 26, ஒருநாள் தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக 'விக்கெட் கீப்பர் பேட்டர்' லோகேஷ் ராகுல் 33, கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே ராகுல், 12 ஒருநாள் போட்டிகளுக்கு (8 வெற்றி, 4 தோல்வி) கேப்டனாக இருந்துள்ளார். துணை கேப்டனாக ரிஷாப் பன்ட் 28, நியமிக்கப்பட்டார்.பும்ரா 'ரெஸ்ட்': சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராத் கோலி, தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். வேகப்பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, சுழற்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டர்' அக்சர் படேலுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. காயத்தில் இருந்து மீண்டு வரும் ஷ்ரேயஸ், ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வு வழங்கப்பட்ட ரவிந்திர ஜடேஜா தேர்வானார்.இந்திய அணி: ராகுல் (கேப்டன்), ரோகித் சர்மா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராத் கோலி, திலக் வர்மா, ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜுரெல்.
22-Nov-2025 | 1
22-Nov-2025