மேலும் செய்திகள்
இரானி கோப்பை: விதர்பா சாம்பியன்
12 hour(s) ago
விதர்பா அணி ஆதிக்கம் * இரானி கோப்பையில்...
04-Oct-2025
புதிய கேப்டன் சுப்மன் கில்
03-Oct-2025 | 1
ஹாமில்டன்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்ரிக்கா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.நியூசிலாந்து சென்ற தென் ஆப்ரிக்க அணி, இரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற நியூசிலாந்து 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் நேற்று ஹாமில்டனில் துவங்கியது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.ருவான் அரைசதம்தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் நெய்ல் பிராண்டு (25), பார்டுய்ன் (0) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. ரேனார்டு 32 ரன் எடுத்து அவுட்டானார். மறுபக்கம் சுழலில் அசத்தினார் ரச்சின் ரவிந்திரா. முதலில் ஜுபைர் ஹம்சா (20) இவரது சுழலில் சிக்கினார். தொடர்ந்து பெடிங்ஹாம் (39), கீகன் பீட்டர்சனையும் (2), ரச்சின் வெளியேற்றினார்.தென் ஆப்ரிக்கா 150/6 ரன் என திணறியது. பின் இணைந்த ருவான் டி ஸவார்ட் அரைசதம் அடித்து விக்கெட் சரிவை தடுத்தார். முதல் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 220/6 ரன் மட்டும் எடுத்திருந்தது. ருவான் (55), ஷான் வான் பெர்க் (34) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்தின் ரச்சின் 3 விக்கெட் சாய்த்தார்.
12 hour(s) ago
04-Oct-2025
03-Oct-2025 | 1