உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ரஞ்சி: வெற்றியை நோக்கி தமிழகம்

ரஞ்சி: வெற்றியை நோக்கி தமிழகம்

கோவா: கோவா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக அணி வெற்றியை நோக்கி முன்னேறுகிறது.இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ரஞ்சி கோப்பை 89வது சீசன் நடக்கிறது. கோவாவில் நடக்கும் 'சி' பிரிவு 5வது சுற்று லீக் போட்டியில் தமிழகம், கோவா அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் கோவா 241, தமிழகம் 273 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் கோவா அணி 2வது இன்னிங்சில் 10/0 ரன் எடுத்திருந்தது.மூன்றாம் நாள் ஆட்டத்தில் கோவா அணிக்கு தமிழக பவுலர்கள் தொல்லை தந்தனர். சுயாஷ் பிரபுதேசாய் (79) ஆறுதல் தந்தார். கோவா அணி 2வது இன்னிங்சில் 168 ரன்னுக்கு சுருண்டது. தமிழகம் சார்பில் சாய் கிஷோர், அஜித் ராம் தலா 4 விக்கெட் சாய்த்தனர்.பின் 137 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி ஆட்டநேர முடிவில் 2வது இன்னிங்சில் 61/1 ரன் எடுத்திருந்தது. சுரேஷ் லோகேஷ்வர் (34), பிரதோஷ் ரஞ்சன் பால் (22) அவுட்டாகாமல் இருந்தனர். இன்னும் 76 ரன் மட்டும் தேவைப்படுவதால் தமிழக அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி