ருதுராஜ் அணி வெற்றி: துலீப் டிராபியில் அசத்தல்
அனந்தபூர்: துலீப் டிராபி லீக் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான இந்தியா 'சி' அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.துலீப் டிராபி கிரிக்கெட் 61வது சீசன் நடக்கிறது. ஆந்திராவின் அனந்தபூரில் நடந்த லீக் போட்டியில் இந்தியா 'சி', 'டி' அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் இந்தியா 'டி' 164, இந்தியா 'சி' 168 ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 'டி' அணி 2வது இன்னிங்சில் 206/8 ரன் எடுத்திருந்தது.மூன்றாம் நாள் ஆட்டத்தில் அக்சர் படேல் 28 ரன்னில் அவுட்டானார். இந்தியா 'டி' அணி 2வது இன்னிங்சில் 236 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா 'சி' சார்பில் மானவ் சுதார் 7 விக்கெட் சாய்த்தார்.பின் 233 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 'சி' அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (46), சாய் சுதர்சன் (22), ஆர்யன் ஜுயால் (47), ரஜத் படிதர் (44) கைகொடுத்தனர். அபிஷேக் போரெல் (35*), மானவ் சுதார் (19*) ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இந்தியா 'சி' அணி 2வது இன்னிங்சில் 233/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது.பன்ட் அரைசதம்பெங்களூருவில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா 'ஏ', 'பி' அணிகள் விளையாடுகின்றன. முதல் இன்னிங்சில் இந்தியா 'பி' 321, இந்தியா 'ஏ' 231 ரன் எடுத்தன. பின் 2வது இன்னிங்சை துவக்கிய இந்தியா 'பி' அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (9), கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் (4), முஷீர் கான் (0) ஏமாற்றினர். சர்பராஸ் கான் (46), ரிஷாப் பன்ட் (61) நம்பிக்கை தந்தனர்.ஆட்டநேர முடிவில் இந்தியா 'பி' அணி 2வது இன்னிங்சில் 150/6 ரன் எடுத்து, 240 ரன் முன்னிலை பெற்றிருந்தது.