மேலும் செய்திகள்
துருவ் ஜுரெல் சதம் * இந்திய ஏ திணறல் ஆட்டம்
06-Nov-2025
தீப்தி சர்மா விடுவிப்பு: உ.பி., அணியில் இருந்து
06-Nov-2025
டி-20 உலக கோப்பை: ஆமதாபாத்தில் பைனல்
06-Nov-2025
சென்னை: ஐ.பி.எல்., தொடரின் 17வது சீசன் தற்போது நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் லீக் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி, சுப்மன் கில்லின் குஜராத்தை எதிர்கொள்கிறது.சென்னை அணிக்கு புதிய கேப்டனாக களமிறங்கிய ருதுராஜ், முதல் போட்டியில் வெற்றி பெற்றுத் தந்தார். இன்று நெருக்கடியில்லாமல் செயல்பட்டு, பேட்டிங்கில் கைகொடுக்க முயற்சிக்கலாம். இவருடன் மீண்டும் ரச்சின் ரவிந்திரா துவக்கம் தரலாம். ரகானே, மிட்செல், ஷிவம் துபே, ஜடேஜா வரை என பேட்டிங் வரிசை நீள்கிறது. இளம் வீரர் சமீர் ரிஸ்வி, 'தல' தோனியின் பேட்டிங்கை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.பந்துவீச்சில் முஸ்தபிஜுர் 4 விக்கெட் சாய்த்தார். மற்றபடி தேஷ்பாண்டே, சகார் ரன்களை வாரி வழங்குகிறார். 2023 தொடரில் கைகொடுத்த பதிரானா அணிக்கு திரும்பியது பலம். தவிர ஷர்துல் தாகூர், முகேஷ் சவுத்ரியும் களமிறங்கும் 'லெவன்' அணியில் இடம் பெறலாம்இளம் கேப்டன்ஐ.பி.எல்., தொடரின் இளம் கேப்டன் சுப்மன் கில் 25. பாண்ட்யா அணி மாறிய நிலையில் குஜராத் அணியை 'கூலாக' கையாள்கிறார். பயிற்சியாளர் ஆஷிஸ் நெஹ்ரா, நியூசிலாந்தின் வில்லியம்சன் என இருவரது அனுபவம் இவருக்கு உதவுகிறது.மும்பைக்கு எதிராக கடைசி நேரத்தில் வெற்றி பெற்றதால், இன்று சென்னையை தன்னம்பிக்கையுடன் சுப்மன் எதிர்கொள்வார். பேட்டிங்கில் சகா, சாய் சுதர்சன், டேவிட் மில்லர், விஜய் சங்கர் கைகொடுக்கலாம்.குஜராத் அணியின் சுழற்பந்து வீச்சு வலுவாக உள்ளது. சுழலில் மிரட்ட ரஷித் கான், சாய் கிஷோர் உள்ளனர். 'வேகத்தில்' ஷமி இல்லாத போதும், உமேஷ் யாதவ், உமர் ஜாய் விக்கெட் சாய்ப்பது பலம்.எது தமிழக அணி...சென்னை ஐ.பி.எல்., அணியில் தமிழக வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. குஜராத் அணியில் சாய் சுதர்சன், சாய் கிஷோர், விஜய் சங்கர், ஷாருக்கான், சந்தீப் வாரியர் என ஐந்து தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் மூன்று வீரர்கள் 'லெவன்' அணியில் இடம் பெறுகின்றனர்.பைனலுக்குப் பின்...சென்னை, குஜராத் அணிகள் இதுவரை 5 போட்டியில் மோதின. சென்னை 2, குஜராத் 3ல் வென்றன. 2023 பைனலில் சென்னை அணி, குஜராத்தை வீழ்த்தி கோப்பை வென்றது.
06-Nov-2025
06-Nov-2025
06-Nov-2025