மேலும் செய்திகள்
பைனலில் மும்பை கேப்டவுன் * 'எஸ்.ஏ.20' தொடரில்
05-Feb-2025
ஜோகனஸ்பர்க்: 'எஸ்.ஏ.20' தொடரில் கேப்டவுன் அணி கோப்பை வென்றது. பைனலில் 76 ரன் வித்தியாசத்தில் ஈஸ்டர்ன் கேப் அணியை வென்றது.தென் ஆப்ரிக்காவில், 'எஸ்.ஏ.20' கிரிக்கெட் 3வது சீசன் நடந்தது. ஜோகனஸ்பர்க்கில் நடந்த பைனலில், மும்பை கேப்டவுன், ஐதராபாத் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த கேப்டவுன் அணிக்கு வான் டெர் துசென் (23), ரிக்கல்டன் (33) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. எஸ்தர்ஹுய்சென் (39), பிரேவிஸ் (38), லிண்டே (20) ஓரளவு கைகொடுத்தனர். கேப்டவுன் அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்தது.சவாலான இலக்கை விரட்டிய ஈஸ்டர்ன் கேப் அணிக்கு டோனி டி ஜோர்ஜி (26), டாம் அபெல் (30) ஜோடி ஓரளவு கைகொடுத்தது. கேப்டன் மார்க்ரம் (6), ஸ்டப்ஸ் (15), யான்சென் (5) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர். ஈஸ்டர்ன் கேப் அணி 18.4 ஓவரில் 105 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. கேப்டவுன் அணி சார்பில் ரபாடா 4, பவுல்ட், லிண்டே தலா 2 விக்கெட் சாய்த்தனர்.ஐதராபாத் ஈஸ்டர்ன் கேப் அணியின் 'ஹாட்ரிக்' கோப்பை வெல்லும் கனவு தகர்ந்தது. மும்பை கேப்டவுன் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தொடர் நாயகன் விருதை மார்கோ யான்சென் (ஈஸ்டர்ன் கேப், 204 ரன், 19 விக்கெட்) வென்றார்.
05-Feb-2025