மேலும் செய்திகள்
இரானி கோப்பை: விதர்பா சாம்பியன்
7 hour(s) ago
விதர்பா அணி ஆதிக்கம் * இரானி கோப்பையில்...
04-Oct-2025
புதிய கேப்டன் சுப்மன் கில்
03-Oct-2025 | 1
கோவை: பேட்டிங்கில் ஏமாற்றிய சேலம் அணி 23 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சேப்பாக்கம் அணி 3வது வெற்றியை பதிவு செய்தது.தமிழகத்தில் டி.என்.பி.எல்., எட்டாவது சீசன் நடக்கிறது. கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சேலம், சேப்பாக்கம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சேலம் அணி கேப்டன் ஷிஜித் சந்திரன் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.சேப்பாக்கம் அணிக்கு சந்தோஷ் குமார் (17), நாராயண் ஜெகதீசன் (10) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. பிரதோஷ் ரஞ்சன் பால் (15), ஆன்ட்ரி சித்தார்த் (9) நிலைக்கவில்லை. டேரில் பெராரியோ (23) ஆறுதல் தந்தார். கேப்டன் பாபா அபராஜித் (41) நம்பிக்கை தந்தார். ஹரிஷ் குமார் வீசிய கடைசி ஓவரில் அசத்திய அபிஷேக் தன்வர், 4 சிக்சர் உட்பட 24 ரன் விளாசினார். சேப்பாக்கம் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 156 ரன் எடுத்தது. அபிஷேக் (26), ராஹில் ஷா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.சவாலான இலக்கை விரட்டிய சேலம் அணிக்கு அபிஷேக் (7), விவேக் (1) சொதப்பினர். கவின் (15) நிலைக்கவில்லை. முகமது அட்னான் கான் (31), ராபின் சிங் பிஸ்ட் (36) ஓரளவு கைகொடுத்தனர். அபிஷேக் தன்வர் வீசிய கடைசி ஓவரில் ஹரிஷ் குமார் 'ஹாட்ரிக்' சிக்சர் விளாசினார். சேலம் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 133 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. ஹரிஸ் (33), சன்னி சந்து (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
7 hour(s) ago
04-Oct-2025
03-Oct-2025 | 1