மேலும் செய்திகள்
இரானி கோப்பை: விதர்பா சாம்பியன்
18 hour(s) ago
விதர்பா அணி ஆதிக்கம் * இரானி கோப்பையில்...
04-Oct-2025
புதிய கேப்டன் சுப்மன் கில்
03-Oct-2025 | 1
தம்புலா: ''ஒரு போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி வருவதால் வெற்றி பெற முடிகிறது,'' என, இந்தியாவின் தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.இலங்கையில் நடக்கும் பெண்களுக்கான ஆசிய கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம் அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. நேபாளத்துக்கு எதிராக 'சுழலில்' அசத்திய இந்தியாவின் தீப்தி சர்மா 3 விக்கெட் சாய்த்தார். இத்தொடரில் 8 விக்கெட் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார்.இதுகுறித்து தீப்தி சர்மா கூறியது: மிகப் பெரிய தொடரை வெற்றியுடன் துவக்க வேண்டியது அவசியம். பாகிஸ்தானுக்கு எதிராக கிடைத்த வெற்றி நம்பிக்கை அளித்தது. ஒவ்வொரு போட்டியாக கவனம் செலுத்தி விளையாடியதால் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. அரையிறுதியிலும் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.போட்டியின் எந்த ஒரு சூழ்நிலையிலும் பந்துவீச தயாராக உள்ளேன். சவால்களை சந்திக்க காத்திருக்கிறேன். பயிற்சியின் போது தீட்டிய திட்டங்களை போட்டியில் சரியாக பயன்படுத்துவதால் சாதிக்க முடிகிறது.இவ்வாறு தீப்தி கூறினார்.
18 hour(s) ago
04-Oct-2025
03-Oct-2025 | 1