உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்தியாவுக்கு அரையிறுதி உறுதியா: ஆஸ்திரேலியாவுடன் மோதல்

இந்தியாவுக்கு அரையிறுதி உறுதியா: ஆஸ்திரேலியாவுடன் மோதல்

செயின்ட்லுாசியா: செயின்ட்லுாசியாவில் இன்று நடக்கும் 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் (பிரிவு-1) இந்தியா, ஆஸ்திரேலியா மோதுகின்றன. இந்திய அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ரிஷாப், சூர்யகுமார், துபே, ஹர்திக் பாண்ட்யா அசத்துகின்றனர். பவுலிங்கில் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மிரட்டுகின்றனர். ஆஸ்திரேலிய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். கடந்த போட்டியில் ஸ்டார்க்கை நீக்கிவிட்டு, ஆஷ்டன் ஏகருக்கு வாய்ப்பு அளித்தது. இன்று ஸ்டார்க் அணிக்கு திரும்பலாம். பேட்டிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காண வேண்டும். தற்போது அரையிறுதிக்கு முன்னேற 'பிரிவு-1' ல் கடும் போட்டி நிலவுகிறது.* இன்று ஆஸ்திரேலியாவை வென்றால், இந்தியா (6 புள்ளி) அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.* ஒருவேளை இன்று தோற்றால், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் தலா 4 புள்ளி பெறும். அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய ஆப்கானிஸ்தான்-வங்கதேசம் (ஜூலை 25) மோதும் போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.* இதில் ஆப்கானிஸ்தான் வென்றால், இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் தலா 4 புள்ளி பெறும். 'ரன்-ரேட்' அடிப்படையில் இரு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.* மாறாக வங்கதேசம் வெற்றி பெற்றால், ஆப்கானிஸ்தான் வெளியேறும். இந்தியா, ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும்.* ஆஸ்திரேலியா தோற்று, ஆப்கானிஸ்தான் வென்றால், இந்தியா, ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும்.* செயின்ட்லுாசியாவில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது ரன் ரேட் வலுவாக உள்ள இந்தியாவுக்கு சாதகம். ஆஸ்திரேலியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ