மேலும் செய்திகள்
இரானி கோப்பை: விதர்பா சாம்பியன்
21 hour(s) ago
விதர்பா அணி ஆதிக்கம் * இரானி கோப்பையில்...
04-Oct-2025
புதிய கேப்டன் சுப்மன் கில்
03-Oct-2025 | 1
செயின்ட் லுாசியா: இங்கிலாந்துக்கு எதிரான 'சூப்பர்-8' போட்டியில் கடைசி ஓவரில் அசத்திய தென் ஆப்ரிக்க அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.வெஸ்ட் இண்டீசின் செயின்ட் லுாசியாவில் நடந்த 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' சுற்று போட்டியில் ('குரூப்-2') தென் ஆப்ரிக்கா, 'நடப்பு சாம்பியன்' இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
தென் ஆப்ரிக்க அணிக்கு ரீசா ஹென்டிரிக்ஸ், குயின்டன் டி காக் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. மொயீன் அலி வீசிய 2வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய குயின்டன், ஆர்ச்சர் வீசிய 4வது ஓவரில் வரிசையாக 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். அபாரமாக ஆடிய குயின்டன், 22 பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்த போது மொயீன் 'சுழலில்' ஹென்டிரிக்ஸ் (19) சிக்கினார். ஆர்ச்சர் 'வேகத்தில்' குயின்டன் (65) வெளியேறினார். கிளாசன் (9), கேப்டன் மார்க்ரம் (1) சோபிக்கவில்லை. டேவிட் மில்லர் (43) கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 163 ரன் எடுத்தது. ஸ்டப்ஸ் (12), மஹாராஜ் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.
சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் (11) சுமாரான துவக்கம் கொடுத்தார். கேஷவ் மஹாராஜ் 'சுழலில்' பேர்ஸ்டோவ் (16), கேப்டன் பட்லர் (17) சிக்கினர். மொயீன் அலி (9) ஏமாற்ற, இங்கிலாந்து அணி 61 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின் இணைந்த ஹாரி புரூக், லிவிங்ஸ்டன் ஜோடி நம்பிக்கை தந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 78 ரன் சேர்த்த போது ராபாடா பந்தில் லிவிங்ஸ்டன் (33) அவுட்டானார். அபாரமாக ஆடிய புரூக், 34 பந்தில் அரைசதம் கடந்தார்.கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டன. நார்ட்ஜே பந்துவீசினார். முதல் பந்தில் புரூக் (52) அவுட்டானார். அடுத்த 5 பந்தில் 5 ரன் மட்டும் கிடைத்தது. இங்கிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன் எடுத்து தோல்வியடைந்தது. கர்ரான் (10), ஆர்ச்சர் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இத்தொடரில் தென் ஆப்ரிக்க அணி தொடர்ச்சியாக 6வது வெற்றியை பதிவு செய்தது.
21 hour(s) ago
04-Oct-2025
03-Oct-2025 | 1