உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இலங்கை செல்கிறது இந்தியா: ஒருநாள், டி-20 அட்டவணை அறிவிப்பு

இலங்கை செல்கிறது இந்தியா: ஒருநாள், டி-20 அட்டவணை அறிவிப்பு

கொழும்பு: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் ஒருநாள், 'டி-20' தொடருக்கான அட்டவணை வெளியானது.இலங்கை செல்லும் இந்திய அணி, மூன்று 'டி-20', மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் போர்டு வெளியிட்டது. இதன்படி மூன்று 'டி-20' போட்டிகள் வரும் ஜூலை 26, 27, 29ல் பல்லேகெலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (இரவு 7:00 மணி) நடக்கவுள்ளன. அதன்பின் மூன்று ஒருநாள் போட்டிகள் ஆக., 1, 4, 7 ல் கொழும்புவின் பிரேமதாசா மைதானத்தில் (மதியம் 2:30 மணி) நடக்கவுள்ளன.பாண்ட்யா கேப்டன் : சமீபத்திய 'டி-20' உலக கோப்பை தொடருக்கு பின், இந்திய அணி பங்கேற்கும் முதல் தொடர் இது. சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராத் கோலி, ரவிந்திர ஜடேஜா ஓய்வு பெற்றதால் ஹர்திக் பாண்ட்யா 'டி-20' அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம். புதிய பயிற்சியாளர் கவுதம் காம்பிருக்கு இத்தொடர் முதல் சவாலாக அமையும்.ஒருநாள் அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்படலாம். தொடர்ச்சியான அட்டவணை காரணமாக ஒருநாள் போட்டியில் சில சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படலாம்.

ஹசரங்கா விலகல்

இலங்கை 'டி-20' அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஹசரங்கா விலகினார். சமீபத்திய 'டி-20' உலக கோப்பையில் இவரது தலைமையில் பங்கேற்ற இலங்கை அணி லீக் சுற்றோடு வெளியேறியது. இதனால் இந்தியாவுக்கு எதிரான தொடரில், இலங்கை அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ