உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சூர்யகுமார் நம்பர்-1: ஐ.சி.சி., டி-20 தரவரிசையில்

சூர்யகுமார் நம்பர்-1: ஐ.சி.சி., டி-20 தரவரிசையில்

துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார்.சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 861 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்தில் தொடர்கிறார். மற்றொரு இந்திய வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (714 புள்ளி) 6வது இடத்தில் நீடிக்கிறார்.பவுலர் தரவரிசையில் இந்தியாவின் அக்சர் படேல் (4வது இடம், 660 புள்ளி), ரவி பிஷ்னோய் (5வது இடம், 659 புள்ளி) 'டாப்-10' வரிசையில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் 'சுழல்' வீரர் ரஷித் கான் 13வது இடத்தில் இருந்து 9வது இடத்தை (தலா 645 புள்ளி) நியூசிலாந்தின் சான்ட்னருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். சமீபத்தில் முடிந்த அயர்லாந்துக்கு எதிரான தொடரில் 8 விக்கெட் சாய்த்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை