உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சூர்யகுமார் நம்பர்-1: ஐ.சி.சி., டி-20 தரவரிசையில்

சூர்யகுமார் நம்பர்-1: ஐ.சி.சி., டி-20 தரவரிசையில்

துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.சர்வதேச 'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ், 861 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்தை தக்கவைத்துக் கொண்டார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம், 763 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறினார். சமீபத்திய நியூசிலாந்து தொடரில் பேட்டிங்கில் அசத்திய பாபர் ஆசம், 4 போட்டியில் 125 ரன் ('ஸ்டிரைக்ரேட்' 138) விளாசினார். இங்கிலாந்தின் பில் சால்ட் (802), பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (784) முறையே 2, 3வது இடத்தில் தொடர்கின்றனர்.மற்றொரு இந்திய வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (714) 6வது இடத்தில் நீடிக்கிறார். இந்தியாவின் ருதுராஜ் கெய்க்வாட் (654) 11வது இடத்துக்கு முன்னேறினார்.பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் அக்சர் படேல் (660 புள்ளி), ரவி பிஷ்னோய் (659) முறையே 4, 5வது இடத்தில் உள்ளனர். முதலிடத்தை இங்கிலாந்தின் அடில் ரஷித் (726) தக்கவைத்துக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி