உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / நேபாளத்தை வீழ்த்தியது கனடா * உலக டி-20 பயிற்சியில்

நேபாளத்தை வீழ்த்தியது கனடா * உலக டி-20 பயிற்சியில்

டல்லாஸ்: உலக கோப்பை பயிற்சி போட்டியில் கனடா அணி 63 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் தற்போது பயிற்சி போட்டிகள் நடக்கின்றன. டல்லாசில் நடந்த போட்டியில் நேபாளம், கனடா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய கனடா அணிக்கு நிகோலஸ் (52), ரவிந்தர்பால் சிங் (41) கைகொடுக்க, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 183 ரன் எடுத்தது. பின் களமிறங்கிய நேபாள அணி குஷால் மல்லா (37), அனில் ஷா (24), ஆசிப் (22), குஷால் (10) மட்டும் இரட்டை இலக்க ரன் எடுத்தனர். மற்றவர் ஒற்றை இலக்கில் வெளியேற, நேபாள அணி 19.3 ஓவரில் 120 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.ஓமன் வெற்றிதரவுபாவில் நடந்த போட்டியில் ஓமன், பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய பப்புவா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 137 ரன் மட்டும் எடுத்தது. பின் விளையாடிய ஓமன் அணி 19.1 ஓவரில் 141/7 ரன் எடுத்து, 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நமீபியா அசத்தல்மற்றொரு போட்டியில் நமீபியா, உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. உகாண்டா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 134 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய நமீபிய அணி 18.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 134 ரன் எடுத்து, 5 விக்கெட்டில் வென்றது.அமெரிக்கா-வங்கதேச மோதல் ரத்துடல்லாசியில் நேற்று அமெரிக்கா, வங்கதேச அணிகள் பயிற்சி போட்டியில் மோத இருந்தன. ஆனால் மோசமான வானிலை காரணமாக மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த ராட்சத 'டிவி' ஸ்கிரீன் சரிந்து விழுந்தது. பயிற்சி போட்டி ரத்து செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை