மேலும் செய்திகள்
இரானி கோப்பை: விதர்பா சாம்பியன்
12 hour(s) ago
விதர்பா அணி ஆதிக்கம் * இரானி கோப்பையில்...
04-Oct-2025
புதிய கேப்டன் சுப்மன் கில்
03-Oct-2025 | 1
நியூயார்க்: உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா, அமெரிக்க அணிகள் மோதுகின்றன. அமெரிக்க அணியில் 8 இந்திய வம்சாவளி வீரர்கள் இடம் பெற்றிருப்பதால், இரு பக்கமும் இந்தியர்களின் ஆட்டத்தை ரசிக்கலாம். வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. இன்று நியூயார்க் எய்சன்ஹவர் பார்க்கில் உள்ள நசாவ் கவுன்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இந்திய அணி வரிசையாக அயர்லாந்து, பாகிஸ்தானை சாய்த்த உற்சாகத்தில் களமிறங்குகிறது. இன்று அமெரிக்காவை வென்று 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேற காத்திருக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா, கோலி வலுவான துவக்கம் தர வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிராக 42 ரன் எடுத்த ரிஷாப் பன்ட், மீண்டும் விளாசலாம். சூர்யகுமார், 'ஆல்-ரவுண்டர்கள்' ஹர்திக் பாண்ட்யா, ரவிந்திர ஜடேஜா ரன் மழை பொழிந்தால் நல்லது. ஷிவம் துபே ஆட்டம் எடுபடவில்லை. இவருக்கு பதில் ஜெய்ஸ்வால் அல்லது சஞ்சு சாம்சனை சேர்க்கலாம். மிரட்டும் பும்ராபந்துவீச்சுக்கு சாதகமான நசாவ் கவுன்டி ஆடுகளத்தில் 'வேகப்புயல்' பும்ரா, அர்ஷ்தீப், சிராஜ் மிரட்டலாம். 'ஆல்-ரவுண்டர்' பாண்ட்யாவும் பக்கபலமாக உள்ளார். 'சுழலில்' அக்சர் அசத்துகிறார். மணிக்கட்டு 'ஸ்பின்னர்'களான குல்தீப், சகாலுக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம். பல நாடுகளின் கலவைஅமெரிக்க அணியில் கேப்டன் மொனான்க் படேல், ஹர்மீத் சிங், நேத்ராவால்கர், ஜெஸ்சி சிங், கென்ஜிகே, நிதிஷ் குமார் உட்பட 8 இந்திய வம்சாவளி வீரர்கள் உள்ளனர். பாகிஸ்தான் (இருவர்), வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, நெதர்லாந்து வம்சாவளி வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், பாகிஸ்தானை 'சூப்பர் ஓவரில்' வென்று அதிர்ச்சி கொடுத்த போது அமெரிக்க 'மீடியா' முக்கியத்துவம் அளிக்கவில்லை. இன்று இந்தியாவுக்கு எதிராக திறமை நிரூபித்து, உலகின் பார்வையை பெற முயற்சிக்கலாம். பாகிஸ்தானுக்கு எதிராக அசத்திய மொனான்க் படேல் (50), ஆன்ட்ரிஸ் கவுஸ், ஆரோன் ஜோன்ஸ் நம்பிக்கை தருகின்றனர். 'வேகங்கள்' அலி கான், நேத்ரவால்கர், 'சுழலில் ஹர்மீத், கென்ஜிகே தொல்லை தரலாம். அனுபவ 'ஆல்-ரவுண்டர்' கோரி ஆண்டர்சன் (நியூசி.,) பலம் சேர்க்கிறார். இன்று அமெரிக்காவை குறைத்து மதிப்பிடாமல், இந்திய அணியினர் கவனமாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்த வேண்டும். நேத்ரா - சூர்யா நேருக்குநேர்அமெரிக்கா அணியில் இடம் பெற்றுள்ளார் இந்திய வம்சாவளி வீரர் நேத்ராவால்கர் (நேத்ரா). ஏற்கனவே மும்பை அணிக்காக (15 வயதுக்கு உட்பட்டோர்), ரஞ்சி, விஜய் ஹசாரே தொடரில் சூர்யகுமார் (சூர்யா) உடன் விளையாடியுள்ளார். இன்று சூர்யாவுக்கு எதிராக பந்துவீச உள்ளார். நேத்ரா கூறுகையில்,''இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது உணர்ச்சிகரமான தருணமாக இருக்கும். களத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு சூர்யாவை சந்திக்க உள்ளேன்,'' என்றார்.
12 hour(s) ago
04-Oct-2025
03-Oct-2025 | 1