உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / விடைபெற்றார் கோலி * சர்வதேச டி-20 அரங்கில்...

விடைபெற்றார் கோலி * சர்வதேச டி-20 அரங்கில்...

பிரிட்ஜ்டவுன்: சர்வதேச 'டி-20' போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் கோலி.இந்திய அணி 'சீனியர்' கோலி 35. கடந்த 2022ல் 'டி-20' உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா தோற்றதும் ஓய்வு பெறுவார் என நம்பப்பட்டது. மீண்டும் வந்த கோலி, கடைசியாக இத்தொடரில் பங்கேற்றார். பைனலில் அரைசதம் விளாச, 2007க்கும் பின் இந்தியா 'டி-20' உலக கோப்பை வென்றது. இம்மகிழ்ச்சியில் சர்வதேச 'டி-20' போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் கோலி.பைனலில் ஆட்டநாயகன் ஆன இவர் கூறியது:எனது கடைசி 'டி-20' உலக கோப்பை தொடர் இது. தவிர இந்தியாவுக்காக விளையாடும், எனது கடைசி 'டி-20' போட்டி. இதில் எப்படியும் வென்று, சாம்பியன் ஆக வேண்டும் என விரும்பினோம். ஏனெனில் ஐ.சி.சி., தொடரில் கோப்பை வெல்ல நாங்கள் நீண்ட காலமாக காத்திருந்தோம். ரோகித் 9 முறை, நான் 6 முறை 'டி-20' உலக கோப்பை தொடரில் விளையாடி உள்ளோம். அடுத்த தலைமுறை வீரர்கள், 'டி-20' போட்டியை முன்னெடுத்துச் செல்ல இது தான் சரியான நேரம். இந்தியா சாம்பியன் ஆன இந்த நாள் மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.4,188 சர்வதேச 'டி-20' அரங்கில் கோலி, இந்திய அணிக்காக 125 போட்டியில் 4,188 ரன் (1 சதம், 38 அரைசதம்) எடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vasudevan
ஜூலை 01, 2024 03:24

போற்குணம் கொண்ட தலை சிறந்த மாவீரன் பற்றி விமர்சனம் செய்தவர்கள், கேலியும் கிண்டல் செய்தவர்கள் இனி நிம்மதியாக உறங்கட்டும்.


M Ramachandran
ஜூன் 30, 2024 12:59

மனமார்ந்த வாழ்த்துக்கள் கோலி அவர்களுக்கு


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை