உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இங்கிலாந்திடம் வீழ்ந்தது வெ.இண்டீஸ் * சூப்பர்-8 சுற்றில் ஏமாற்றம்

இங்கிலாந்திடம் வீழ்ந்தது வெ.இண்டீஸ் * சூப்பர்-8 சுற்றில் ஏமாற்றம்

கிராஸ் ஐலெட்: 'சூப்பர்-8' சுற்று முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.வெஸ்ட் இண்டீசில் 'டி-20' உலக கோப்பை தொடரின் 'சூப்பர்-8' போட்டி நடக்கின்றன. கிராஸ் ஐலெட்டில் நடந்த 'பிரிவு 2' லீக் போட்டியில் நேற்று இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர், பீல்டிங் தேர்வு செய்தார். பிரண்டன் காயம்வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிரண்டன் கிங், சார்லஸ் ஜோடி துவக்கம் கொடுத்தது. டாப்லே பந்தில் பிரண்டன் அடித்த சிக்சர், 101 மீ., துாரத்துக்கு சென்று, மைதானத்துக்கு வெளியே விழுந்தது. பின் வேறு பந்தில் போட்டி தொடர்ந்தது. இவர் 13 பந்தில் 23 ரன் எடுத்த போது, கர்ரான் பந்தை அடிக்க முயன்றார். அப்போது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் திரும்பினார். சார்லஸ் (38) அவுட்டாக, வெஸ்ட் இண்டீஸ் 12 ஓவரில் 102/1 ரன் எடுத்தது. பின் வந்த கேப்டன் பாவெல் (36), பூரன் (36), ரசல் (1) சீரான இடைவெளியில் அவுட்டாக, ஸ்கோர் வேகம் குறைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 180/4 ரன் எடுத்தது. ரூதர்போர்டு (28), ஷெப்பர்டு (5) அவுட்டாகாமல் இருந்தனர். சால்ட் அபாரம்இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட், பட்லர் (25) ஜோடி துவக்கம் தந்தது. மொயீன் அலி (13) நிலைக்கவில்லை. அடுத்து சால்ட், பேர்ஸ்டோவ் இணைந்தனர். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து வெற்றிக்கு 42 பந்தில் 70 ரன் தேவைப்பட்டன. ஹொசைன் வீசிய 15வது ஓவரில் பேர்ஸ்டோவ், 4, 6, 4 என விளாச, 16 ரன் கிடைத்தன. அடுத்து வந்த ஷெப்பர்டு ஓவரில் (16வது) சால்ட் 30 ரன் (4, 6, 4, 6, 6, 4) குவிக்க வெற்றி எளிதானது. இங்கிலாந்து 17.3 ஓவரில் 181/2 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சால்ட் (87), பேர்ஸ்டோவ் (48) அவுட்டாகாமல் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை