உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தமிழக பவுலர்கள் அசத்தல்: கூச் பெஹார் டிராபியில்

தமிழக பவுலர்கள் அசத்தல்: கூச் பெஹார் டிராபியில்

ஐதராபாத்: கூச் பெஹார் டிராபியில் தமிழக பவுலர்கள் அசத்த, ஐதராபாத் அணி முதல் இன்னிங்சில் 222 ரன் மட்டும் எடுத்தது.ஐதராபாத்தில் நடக்கும் கூச் பெஹார் டிராபி (19 வயது) தொடருக்கான 'சி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஐதராபாத் அணிக்கு வாபி கச்சி (137) சதம் கடந்து கைகொடுத்தார். ஆரோன் ஜார்ஜ் (0), சித்தார்த் ராவ் (3), யாஷ்வீர் (23), நிஷாந்த் ரெட்டி (16) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர். ஐதராபாத் அணி முதல் இன்னிங்சில் 222 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தமிழகம் சார்பில் தீபேஷ் 4, ஹேம்சுதேஷன் 3, பிரனவ் ராகவேந்திரா 2 விக்கெட் சாய்த்தனர்.பின் முதல் இன்னிங்சை துவக்கிய தமிழக அணிக்கு கேப்டன் அபினவ் கண்ணன் (25) ஆறுதல் தந்தார். ஆட்டநேர முடிவில் தமிழக அணி ஒரு விக்கெட்டுக்கு 74 ரன் எடுத்திருந்தது. ஸ்ரேனிக் (38), கிஷோர் (5) அவுட்டாகாமல் இருந்தனர். ஐதராபாத் சார்பில் யாஷ்வீர் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை