உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா * ஜூனியர் உலக கோப்பையில் எதிர்பார்ப்பு

அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா * ஜூனியர் உலக கோப்பையில் எதிர்பார்ப்பு

புளோம்போன்டீன்: ஜூனியர் உலக கோப்பை தொடரின் 'சூப்பர்-6' போட்டியில் இந்தியா, நேபாள அணிகள் மோதுகின்றன.தென் ஆப்ரிக்காவில் ஜூனியர் உலக கோப்பை தொடர் (19 வயது) நடக்கிறது. லீக் சுற்று முடிவில் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 'சூப்பர்-6' சுற்றில் மோதுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும். பிரிவு 1ல் இடம் பெற்ற இந்திய அணி, 6 புள்ளியுடன் (ரன்ரேட் 3.327) முதலிடத்தில் உள்ளது. கடைசி 3 இடம் பிடித்த நியூசிலாந்து (2), நேபாளம் (0), அயர்லாந்து (0) அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்தன. இன்று இந்திய அணி தனது கடைசி போட்டியில் நேபாளத்தை சந்திக்கிறது. இதில் வெல்லும் பட்சத்தில் முதல் அணியாக அரையிறுதிக்கு செல்லலாம். 2016 உலக தொடரில் அதிக ரன் குவித்த சர்பராஸ் கானைப் போல, இவரது சகோதரர் முஷீர் கான், இதுவரை 325 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். தவிர கேப்டன் உதய் சஹாரன், ஆதர்ஷ், அர்ஷின் மீண்டும் உதவலாம். பந்துவீச்சில் இதுவரை 12 விக்கெட் சாய்த்த 'சுழல்' பவுலர் சவுமி பாண்டே மறுபடியும் கைகொடுக்க காத்திருக்கிறார். இதே பிரிவில் 2, 3 வது இடத்திலுள்ள பாகிஸ்தான் (6, 1.064), வங்கதேச (4, 0.348)) அணிகள் இன்று மோதுகின்றன. இதில் வங்கதேசம் இமாலய வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு செல்லலாம். இல்லையெனில் பாகிஸ்தான் முன்னேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை