மேலும் செய்திகள்
ஹாரி கேன் சாதனை: ரொனால்டோவை முந்தினார்
27-Sep-2025
தெற்காசிய கால்பந்து: பைனலில் இந்தியா
25-Sep-2025
புட்சல்: இந்தியா முதல் வெற்றி
25-Sep-2025
மெஸ்ஸி மேஜிக்: மயாமி வெற்றி
21-Sep-2025
பெர்லின்: யூரோ கால்பந்து லீக் போட்டியில் இன்று ஸ்பெயின்-குரோஷிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான யூரோ கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடக்கிறது. 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டி நடக்கின்றன. இன்று பெர்லினில் நடக்கும் போட்டியில் உலகத் தரவரிசையில் 8வது இடத்திலுள்ள ஸ்பெயின், 'நம்பர்-10' ஆக உள்ள குரோஷிய அணிகள் மோதுகின்றன. மூன்று கோப்பைஸ்பெயின் அணி யூரோ தொடரில் 1964, 2008, 2012 என மூன்று முறை கோப்பை வென்றது. கடைசியாக 2020ல் அரையிறுதியில் இத்தாலியிடம் தோற்றது. இம்முறை 'பி' பிரிவில் மீண்டும் இத்தாலியுடன் (ஜூன் 20) இடம் பெற்றுள்ளது. 'டாப்-2' அணிகள், சிறந்த மூன்றாவது அணி அடுத்த சுற்றுக்கு செல்லலாம். இதனால் ஸ்பெயின், இத்தாலி, குரோஷிய அணிகள் இப்பிரிவில் இருந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம்.சமீபத்திய 'நட்பு' போட்டியில் அண்டோரா (5-0), வடக்கு அயர்லாந்து (5-1) அணிகளை வீழ்த்திய உற்சாகத்தில் ஸ்பெயின் உள்ளது. குரோஷியாவுக்கு எதிராக மோதிய 10 போட்டியில் ஸ்பெயின் 6ல் வென்றுள்ளது பலம். அணியில் பலர் அதிக அறிமுகம் இல்லாத வீரர்கள். எனினும் முன்கள வீரர்கள் ஆல்வரோ மொராட்டோ, லாமைன், வில்லியம்சுடன் ரோத்ரி, பெத்ரி அணிக்கு கைகொடுக்கலாம்.குரோஷியா எப்படியூரோ தொடரில் குரோஷிய அணி இதுவரை காலிறுதியை (1996, 2006) தாண்டியது இல்லை. கடந்த முறை (2020) 'ரவுண்டு-16' போட்டியில் ஸ்பெயினிடம், கூடுதல் நேரத்தில் 3-5 என தோற்றது. இருப்பினும் 2018 உலக கோப்பை தொடர் பைனல், 2022ல் 3வது இடம் பெற்றது, இத்தொடரில் சாதிக்க உதவலாம். அனுபவ கோல் கீப்பர் லாஜோவிச், 'சீனியர்' லுகா மாட்ரிச், கிராமரிக் வெற்றிக்கு உதவ காத்திருக்கின்றனர். இன்று நடக்கும் மற்ற போட்டிகளில் நடப்பு சாம்பியன் இத்தாலி-அல்பேனியா ('பி' பிரிவு), ஹங்கேரி-சுவிட்சர்லாந்து ('ஏ' பிரிவு) அணிகள் மோதுகின்றன.
27-Sep-2025
25-Sep-2025
25-Sep-2025
21-Sep-2025