உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / கால்பந்து: இந்தியா மீண்டும் தோல்வி

கால்பந்து: இந்தியா மீண்டும் தோல்வி

சார்ஜா: 'பிங்க் லேடீஸ்' கோப்பை கால்பந்து லீக் போட்டியில் இந்திய அணி 0-3 என தென் கொரியாவிடம் தோல்வியடைந்தது.ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), பெண்களுக்கான 'பிங்க் லேடீஸ்' கோப்பை கால்பந்து 2வது சீசன் நடந்தது. இந்தியா, தென் கொரியா, தாய்லாந்து, உஸ்பெகிஸ்தான், ஜோர்டான், ரஷ்யா என 6 அணிகள் பங்கேற்றன. முதல் போட்டியில் ஜோர்டானை வீழ்த்திய இந்தியா, 2வது போட்டியில் ரஷ்யாவிடம் தோல்வியடைந்தது.'பிபா' உலக தரவரிசையில் 69வது இடத்தில் உள்ள இந்திய அணி, நேற்று தனது 3வது, கடைசி லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-20' தென் கொரியாவை சந்தித்தது. இதில் ஏமாற்றிய இந்திய அணி 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.இந்திய அணி 3 போட்டியில், ஒரு வெற்றி, 2 தோல்வி என 3 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை