உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / தவிக்கும் இந்திய கால்பந்து... * தலையிடுவாரா பிரதமர் மோடி

தவிக்கும் இந்திய கால்பந்து... * தலையிடுவாரா பிரதமர் மோடி

புதுடில்லி: சர்வதேச கால்பந்து அரங்கில் இந்திய அணியின் நிலை பரிதாபமாக உள்ளது. சமீபத்தில் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறாமல் ஏமாற்றியது. 'பிபா' ரேங்கிங் பட்டியலில் 142வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்தியாவில் நடக்கும் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர், நிர்வாக குளறுபடிகளால் இந்த ஆண்டு இன்னும் துவக்கப்படவில்லை. சமீபத்தில் நடந்த இதன் வர்த்தக 'டெண்டரில்' பெரியளவில் யாரும் பங்கேற்கவில்லை. இதுகுறித்து, பிரதமர் மோடிக்கு ஈஸ்ட் பெங்கால் அணி தலைவர் முராரி லால் லோகியா எழுதியுள்ள கடிதம்:இந்தியா முழுவதும் விளையாட்டுக்கு புதிய கட்டமைப்பு, கேலோ இந்தியா போட்டிகள் என பல்வேறு முயற்சிகளால் இந்தியா விளையாட்டின் முகம் மாறி வருகிறது. அதேநேரம் தேசத்தில் கால்பந்தின் நிலை மோசமாக உள்ளது.ஐ.எஸ்.எல்., தாமதத்தால் ஒட்டுமொத்த கால்பந்தும் செயல் இழந்து, வீரர்கள், பயிற்சியாளர்களிடம் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. நீங்கள் தலையிட்டு, போட்டிகள் துவங்க ஏற்பாடு செய்யுங்கள்.சமீபகாலமாக இந்திய கால்பந்தில் முதலீடு, ஸ்பான்சர் செய்பவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டு, கால்பந்து வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஐ.எஸ்.எல்., தாமதத்திற்கு இதுவும் ஒரு காரணம். முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த, உங்களது வழிகாட்டுதல் அவசரமாக தேவைப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை