உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / செஸ்: பிரக்ஞானந்தா, விதித் ஷாக் * பின்தங்கிய குகேஷ்

செஸ்: பிரக்ஞானந்தா, விதித் ஷாக் * பின்தங்கிய குகேஷ்

டொரன்டோ: 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரின் 11 வது சுற்றில் பிரக்ஞானந்தா, விதித் தோல்வியடைந்தனர். கனடாவின் டொரன்டோவில் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடர் நடக்கிறது. இதன் 11வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா, நகமுரா மோதினர். துவக்கத்தில் சற்று முந்திய பிரக்ஞானந்தா, அடுத்தடுத்து தவறாக நகர்த்த, 54 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்திய வீரர் விதித், ரஷ்யாவின் நெபோம்னியாட்சியிடம் தோல்வியடைந்தார். இந்திய வீரர் குகேஷ், அமெரிக்காவின் பேபியானோ காருணாவை சந்தித்தார். இப்போட்டி 40 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. யாருக்கு வாய்ப்பு11 சுற்று முடிவில் நெபோம்னியாட்சி (7.0) முதல் இடத்துக்கு முன்னேறினார். குகேஷ் (6.5) இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். 3, 4வது இடத்தில் நகமுரா (6.5), காருணா (6.0) உள்ளனர். 5.5 புள்ளியுடன் பிரக்ஞானந்தா ஆறாவது இடத்துக்கு பின் தங்கினார். விதித் குஜ்ராத்தி (5.0) 7வது இடத்தில் உள்ளார்.இன்னும் மூன்று சுற்றுகள் மீதமுள்ளன. தற்போதைய நிலையில் நெபோம்னியாட்சி அல்லது குகேஷ் சாம்பியன் பட்டம் பெறலாம். பிரக்ஞானந்தா எஞ்சிய 3 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பெண்களுக்கான 11வது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, ஹம்பி வென்றனர். ஹம்பி (5.5) 4வது, வைஷாலி (4.5) 7வது இடத்தில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை