செஸ்: பைனலில் அர்ஜுன்
லண்டன்: செஸ் மாஸ்டர்ஸ் தொடரின் பைனலுக்கு முன்னேறினார் அர்ஜுன் எரிகைசி.இங்கிலாந்தின் லண்டனில் செஸ் மாஸ்டர்ஸ் தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதியில் இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி மோதினர். முதல் போட்டியில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்தார். அடுத்து நடந்த இரண்டாவது போட்டியில் அர்ஜுன் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார்.இதில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலையில், 36 வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது. இதையடுத்து அர்ஜுன் 1.5-0.5 என வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார்.இதில் அர்ஜுன், பிரான்சின் மேக்சிம் வாசியர் மோதுகின்றனர். முதல் போட்டியில் அர்ஜுன் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இப்போட்டி 30 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. இருவரும் 0-5.-0.5 என சமநிலையில் உள்ளனர்.