எக்ஸ்டிராஸ்
* கிரிக்கெட் லீக் தொடருக்கான மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக, முன்னாள் இந்திய பேட்டர் ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார். பவுலிங் பயிற்சியாளராக மிட்செல் மெக்லீனகன் (நியூசிலாந்து), மேம்பாட்டு பவுலிங் பயிற்சியாளராக தவால் குல்கர்னி (இந்தியா), பீல்டிங் பயிற்சியாளராக திலிப் (இந்தியா) அறிவிக்கப்பட்டுள்ளனர். * ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடக்கவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் (19 வயது, நவ. 5–14) தொடருக்கான இந்திய அணியில், ராகுல் டிராவிட் மகன் அன்வே 17, சேவக் மகன் ஆர்யவிர் 19, இடம் பெற்றுள்ளனர். கேப்டனாக லக்சயா ராய்சந்தனி, துணை கேப்டனாக யாஷ்பர்தன் சிங் சவுகான் நியமிக்கப்பட்டனர். * கடந்த ஆகஸ்ட் மாதம் தொடையின் பின்பகுதியில் காயமடைந்த இந்திய ‘டாப்–ஆர்டர்’ வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 26, முழு உடற்தகுதி பெற்றார். இவர், அடுத்த மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. * அஜர்பெய்ஜானில், ‘பிபா’ உலக கோப்பை (15 வயது) கால்பந்து முதல் சீசன் நடந்தது. இதில் 87–88வது இடத்துக்கான போட்டியில் இந்தியா, கியூபா அணிகள் மோதின. இந்திய அணி 6–4 என வெற்றி பெற்று 87வது இடம் பிடித்தது. * செனகலில், யூத் ஒலிம்பிக் விளையாட்டு இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் 17 பேர் (6 வீரர், 11 வீராங்கனைகள்) பங்கேற்கின்றனர். இந்திய அணியின் குழுத்தலைவராக, முன்னாள் குண்டு எறிதல் வீரர் ஓம் பிரகாஷ் 39, நியமிக்கப்பட்டுள்ளார்.