மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
02-Oct-2025
மான்ட்ரியல்: கனடா 'பார்முலா-1' கார்பந்தயத்தில் 'ரெட் புல்' அணியின் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்றார்.நடப்பு சீசனுக்கான 'கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா--1' கார்பந்தயம் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 9வது சுற்று கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடந்தது. இதில் பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 45 நிமிடம், 47.927 வினாடியில் கடந்த 'ரெட் புல் ரேசிங் ஹோண்டா' அணியின் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இது, நடப்பு சீனில் இவர் கைப்பற்றிய 6வது பட்டம். ஏற்கனவே பஹ்ரைன், சவுதி அரேபியா, ஜப்பான், சீனா, இத்தாலியில் நடந்த போட்டியில் கோப்பை வென்றிருந்தார். தவிர இது, ஒட்டுமொத்தமாக இவர் கைப்பற்றிய 60வது சாம்பியன் பட்டம்.அடுத்த இடத்தை 'மெக்லாரன் மெர்சிடஸ்' அணியின் பிரிட்டன் வீரர் லாண்டோ நோரிஸ் கைப்பற்றினார். தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த 'மெர்சிடஸ்' அணியின் பிரிட்டன் வீரர் ஜார்ஜ் ரசல் 3வது இடம் பிடித்தார். நடப்பு ஆண்டின் சிறந்த டிரைவருக்கான உலக சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் வெர்ஸ்டாப்பன் 194 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். கடந்த மூன்று சீசனில் (2021-2023) உலக சாம்பியன் பட்டம் வென்ற வெர்ஸ்டாப்பன் மீண்டும் கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
03-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025