உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஜிம்னாஸ்டிக்ஸ்: தீபா கர்மாகர் 4வது இடம்

ஜிம்னாஸ்டிக்ஸ்: தீபா கர்மாகர் 4வது இடம்

தோகா: உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் 'வால்ட்' பிரிவில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் 4வது இடம் பிடித்தார்.கத்தார் தலைநகர் தோகாவில் உலக கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் நடந்தது. இது, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றாகும். பெண்களுக்கான 'வால்ட்' பிரிவில் இந்தியாவின் தீபா கர்மாகர் 30, பிரனதி நாயக் 29, பங்கேற்றனர். இதன் தகுதிச் சுற்றில் தீபா கர்மாகர் (12.783 புள்ளி) 6வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார். பிரனதி நாயக் (12.416 புள்ளி) 11வது இடம் பிடித்து ஏமாற்றினார்.அடுத்து நடந்த பைனலில் 13.333 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்த தீபா கர்மாகர், பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். கடந்த மாதம் அஜர்பெய்ஜானில் நடந்த உலக கோப்பை 'வால்ட்' பிரிவு பைனலிலும் தீபா கர்மாகர் 4வது இடம் பிடித்திருந்தார்.முதல் மூன்று இடங்களை பனாமாவின் நவாஸ் கர்லா (13.850), வடகொரியாவின் ஆன் சாங் ஓகே (13.833), பல்கேரியாவின் ஜார்ஜீவா வாலன்டினா (13.466) கைப்பற்றி பதக்கம் வென்றனர்.உஸ்பெகிஸ்தானில் வரும் மே 16-19ல் ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இது, பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான கடைசி வாய்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை