உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஹாக்கி: புதிய கேப்டன் சலிமா

ஹாக்கி: புதிய கேப்டன் சலிமா

புதுடில்லி: புரோ லீக் ஹாக்கி தொடருக்கான இந்திய பெண்கள் அணியின் புதிய கேப்டனாக சலிமா நியமிக்கப்பட்டார்.பெண்களுக்கான புரோ லீக் ஹாக்கி 5வது சீசன் நடக்கிறது. இந்திய அணி இதுவரை விளையாடிய 8 போட்டியில், 3 வெற்றி, 5 தோல்வி என 8 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. அடுத்து பெல்ஜியம் (மே 22, 23, 25, 26), இங்கிலாந்தில் (ஜூன் 1, 2, 8, 9) நடக்கும் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.இதற்கான 24 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. புதிய கேப்டனாக சலிமா டெட் நியமிக்கப்பட்டார். சமீபத்தில் ஹாக்கி இந்தியா சார்பில் ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான பால்பிர் சிங் சீனியர் விருது வழங்கப்பட்டது. துணை கேப்டனாக நவ்னீத் கவுர் அறிவிக்கப்பட்டார். கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சவிதா, கோல்கீப்பராக அணியில் நீடிப்பார்.

இந்திய அணி:

சலிமா (கேப்டன்), நவ்னீத் கவுர் (துணை கேப்டன்), சவிதா, பிச்சு தேவி (கோல்கீப்பர்), நிக்கி பிரதான், உதிதா, இஷிகா சவுத்தரி, மோனிகா, ஜோதி சாத்ரி, மஹிமா சவுத்தரி, வைஷ்ணவி, நேஹா, ஜோதி, பல்ஜீத் கவுர், மணிஷா சவுகான், லால்ரெம்சியாமி, மும்தாஜ் கான், சங்கீதா குமாரி, தீபிகா, ஷர்மிளா தேவி, பிரீத்தி துபே, வந்தனா, சுனேலிதா, தீபிகா சோரெங்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ