உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / தேசிய ஹாக்கி: அரையிறுதியில் மத்திய பிரதேசம்

தேசிய ஹாக்கி: அரையிறுதியில் மத்திய பிரதேசம்

புனே: பெண்கள் தேசிய ஹாக்கி தொடரின் அரையிறுதிக்கு மத்திய பிரதேசம், ஹரியானா, ஜார்கண்ட் அணிகள் முன்னேறின.மகாராஷ்டிராவின் புனேயில் சீனியர் பெண்களுக்கான தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 14வது சீசன் நடக்கிறது. இதன் காலிறுதியில் 'நடப்பு சாம்பியன்' மத்திய பிரதேசம் (ம.பி.,), பெங்கால் அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது. பின் 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் அசத்திய ம.பி., அணி 4-3 என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.மற்றொரு காலிறுதியில் ஜார்க்கண்ட் அணி 2-1 என மிசோரமை வென்றது. ஹரியானா அணி 4-1 என ஒடிசா அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு காலிறுதியில் மகாராஷ்டிரா அணி 2-1 என மணிப்பூரை வென்றது.அரையிறுதியில் ஹரியானா - ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் - மகாராஷ்டிரா அணிகள் மோதுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை