உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / புரோ கபடி: அரையிறுதியில் புனே

புரோ கபடி: அரையிறுதியில் புனே

பஞ்ச்குலா: புரோ கபடி லீக் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது புனே அணி.இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 10 வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள் மோதுகின்றன. நேற்று ஹரியானாவின் பஞ்ச்குலாவில் நடந்த லீக் போட்டியில் புனே, உ.பி., அணிகள் மோதின. முதல் பாதியில் உ.பி., அணி 28-15 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் எழுச்சி பெற்ற புனே அணி, 40-38 என வெற்றி பெற்றது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் ஹரியானா, பெங்களூரு அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் 24-24 என சம நிலையில் இருந்தன. இரண்டாவது பாதியில் அசத்திய பெங்களூரு 53-39 என வெற்றி பெற்றது. லீக் சுற்று முடிவில் முதல் இரு இடம் பெற்ற புனே (96), ஜெய்ப்பூர் (92) அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறின. அடுத்த நான்கு இடம் பெற்ற டில்லி (79), குஜராத் (70), ஹரியானா (70), பாட்னா (69) அணிகள் அரையிறுதி 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறின.இம்முறையும் ஏமாற்றிய தமிழ் தலைவாஸ் அணி மொத்தம் பங்கேற்ற 22 போட்டியில் 9 வெற்றி மட்டும் பெற்று (13 தோல்வி), 51 புள்ளியுடன் 9 வது இடத்துக்கு தள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை