உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பெங்களூருவை வீழ்த்தியது புனே: புரோ கபடியில் கலக்கல்

பெங்களூருவை வீழ்த்தியது புனே: புரோ கபடியில் கலக்கல்

புதுடில்லி: புரோ கபடி லீக் போட்டியில் புனே அணி 40-31 என பெங்களூருவை வீழ்த்தியது.இந்தியாவில் புரோ கபடி லீக் 10வது சீசன் நடக்கிறது. டில்லியில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, புனே அணிகள் மோதின. ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கான இடத்தை உறுதி செய்த புனே அணிக்கு அஸ்லாம் முஸ்தபா இனாம்தர் முதல் புள்ளி பெற்றுத்தந்தார். பெங்களூரு அணிக்கு சுஷில், ரான் சிங் ஆறுதல் தந்தனர். ஆகாஷ் ஷிண்டே, மோகித் கோயத் கைகொடுக்க முதல் பாதி முடிவில் புனே அணி 18-13 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய புனே அணியினர், பெங்களூரு வீரர்களை 'ஆல்-அவுட்' செய்தனர். ஆட்டநேர முடிவில் புனே அணி 40-31 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இது, புனே அணியின் 13வது வெற்றியானது. புனே அணிக்கு கேப்டன் அஸ்லாம் முஸ்தபா (11) கைகொடுத்தார். பெங்களூரு அணிக்கு சுஷில் (9) ஆறுதல் தந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி