உள்ளூர் செய்திகள்

‘ரவுண்ட்–அப்’

சீன வீராங்கனை சாம்பியன் கவ்லுான்: ஹாங்காங்கில், ‘சூப்பர் 500’ அந்தஸ்து பெற்ற ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், சீனாவின் வாங் ஜியி, தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவோங் மோதினர். மொத்தம் 40 நிமிடம் நடந்த போட்டியில் அசத்திய வாங் ஜியி 21–16, 21–11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக 2வது முறையாக (2025, 2026) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். மான்செஸ்டர் சிட்டி ‘டிரா’ மான்செஸ்டர்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. மான்செஸ்டரில் நடந்த லீக் போட்டியில், மான்செஸ்டர் சிட்டி, புல்ஹாம் அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 1–1 என ‘டிரா’ ஆனது. எலியாட் ஆண்டர்சன் (மான்செஸ்டர் சிட்டி, 57வது நிமிடம்), ரோட்ரிகோ முனிஸ் (புல்ஹாம், 16வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர். மான்செஸ்டர் சிட்டி அணி, 11 போட்டியில், 7 வெற்றி, ஒரு ‘டிரா’, 3 தோல்வி என, 22 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை