உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஸ்பெயின் குத்துச்சண்டை: அரையிறுதியில் அமித்

ஸ்பெயின் குத்துச்சண்டை: அரையிறுதியில் அமித்

லா நுசியா: சர்வதேச குத்துச்சண்டை தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் அமித் குமார் (63.5 கிலோ), இஷ்மீத் சிங் (75 கிலோ), சச்சின் குமார் (80 கிலோ) முன்னேறினர்.ஸ்பெயினில் சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடக்கிறது. இதன் 63.5 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அமித் குமார், மெக்சிகோவின் மிகுயல் ஏஞ்சல் மார்டினஸ் மோதினர். இதில் அமித் குமார் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அரையிறுதியில் அமித் குமார், உஸ்பெகிஸ்தானின் ரஸ்லான் அப்துல்லாவ் மோதுகின்றனர்.அடுத்து நடந்த 75 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் இஷ்மீத் சிங், ஸ்பெயினின் டிடாக் லோபஸ் கோமஸ் மோதினர். இதில் இஷ்மீத் 4-1 என வெற்றி பெற்றார். அரையிறுதியில் இஷ்மீத், போலந்தின் மைக்கேல் ஜார்லின்ஸ்கி மோதுகின்றனர்.பின் 80 கிலோ பிரிவு காலிறுதியில் ஸ்பெயினின் பாப்லோ காய் பெர்னல் விலகியதால் இந்தியாவின் சச்சின் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரையிறுதிக்குள் நுழைந்தார்.மற்ற எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிலால் முகமது (54 கிலோ), திக் ஷ்யந்த் தாஹியா (60 கிலோ), ரூபல் சிந்த் தண்டா (67 கிலோ) தோல்வியை தழுவினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை