ஸ்குவாஷ்: அனாஹத் சாம்பியன்
காப்ஸ் ஹார்பர்: சர்வதேச சேலஞ்சர் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் அனாஹத் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்.ஆஸ்திரேலியாவில், கோஸ்டா நார்த் கோஸ்ட் ஓபன் சேலஞ்சர் ஸ்குவாஷ் தொடர் நடந்தது. இதன் பெண்களுக்கான பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங் 16, ஜப்பானின் அகாரி மிடோரிகவா மோதினர். அபாரமாக ஆடிய அனாஹத் சிங் 3-0 (11-6, 11-6, 11-7) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இது, இந்த ஆண்டு அனாஹத் கைப்பற்றிய 6வது சேலஞ்சர் பட்டம். ஒட்டுமொத்தமாக 15 பட்டம் வென்றுள்ளார்.ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் (2 தங்கம், ஒரு வெண்கலம்), ஆசிய சாம்பியன்ஷிப் (ஒரு வெண்கலம்), ஆசிய விளையாட்டில் (2 வெண்கலம்) பதக்கம் வென்ற அனாஹத், இந்த ஆண்டு ஜூனியர், சீனியர் பிரிவில் தேசிய சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.