உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / விஷ்ணு சரவணன் தங்கம் * பாய்மர படகு போட்டியில் அபாரம்

விஷ்ணு சரவணன் தங்கம் * பாய்மர படகு போட்டியில் அபாரம்

மல்லோர்கா: ஸ்பெயின் பாய்மர போட்டியில் தங்கம் வென்றார் விஷ்ணு சரவணன்.ஸ்பெயினின் மல்லோர்கா நகரில் ஐரோப்பிய கோப்பைக்கான பாய்மர படகு போட்டி நடந்தது. ஐந்து பிரிவுகளில் 334 பேர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் விஷ்ணு சரவணன் (தமிழகம்) பங்கேற்றார். ஹாங்சு ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற இவர், சமீபத்தில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய பாய்மர படகு வீரர் ஆனார்.இம்முறை காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இருப்பினும் 'செவன் ரேசஸ்' ('ஐ.எல்.சி.ஏ-7') பிரிவில் சிறப்பாக செயல்பட்ட விஷ்ணு சரவணன், மொத்தம் 17 புள்ளி பெற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். நெதர்லாந்தின் வில்லியம் (17 புள்ளி), ஆஸ்திரேலியாவின் லாசன் (22 புள்ளி) வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை