உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பளுதுாக்குதல்: சஞ்சனா வெண்கலம்

பளுதுாக்குதல்: சஞ்சனா வெண்கலம்

பெரு: உலக 'யூத்' பளுதுாக்குதலில் இந்தியாவின் சஞ்சனா வெண்கலம் வென்றார்.பெருவில், உலக 'யூத்' பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் நடந்தது. பெண்களுக்கான 76 கிலோ பிரிவில் இந்தியாவின் சஞ்சனா (210 கிலோ) வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். தவிர இவர், ஸ்னாட்ச் (90 கிலோ), 'கிளீன் அண்ட் ஜெர்க்' (120 கிலோ) பிரிவில் முறையே வெண்கலம், வெள்ளி வென்றார்.இத்தொடரில் இந்தியாவுக்கு 2 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 6 பதக்கம் கிடைத்தது. பிரீத்திஸ்மிதா (பெண்கள் 40 கிலோ), பெடபிராத் பரலி (ஆண்கள் 73 கிலோ) தலா ஒரு தங்கம் கைப்பற்றினர். தவிர, 'ஸ்னாட்ச்', 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 6 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என 17 பதக்கங்கள் கிடைத்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !