உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக செஸ்: திவ்யா அபாரம்

உலக செஸ்: திவ்யா அபாரம்

காந்திநகர்: ஜூனியர் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் திவ்யா முதலிடத்தில் உள்ளார்.குஜராத்தில் ஜூனியர் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான பிரிவில் 101 பேர் பங்கேற்கின்றனர். ஆறாவது சுற்றில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், அஜர்பெய்ஜானின் அயன் அலாவெர்தியேவா மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய திவ்யா, போட்டியின் 45வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.மற்ற போட்டிகளில் இந்தியாவின் ரக்சித்தா, பாக்யஸ்ரீ, தக்சிதா, சரண்யா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். ஆறு சுற்று முடிவில் திவ்யா 5.5 புள்ளியுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். ஆர்மேனியாவின் மரியம் (5.0), ரஷ்யாவின் கெசினியா (5.0) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.ஓபன் பிரிவில் இந்திய வீரர் இளம்பரிதி, 4.5 புள்ளியுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ